செய்திகள்

மாணவர்கள் தமிழகத்தை அழிவில் இருந்து காக்க வரவேண்டும்- வைகோ

Published On 2018-05-03 11:20 GMT   |   Update On 2018-05-03 11:20 GMT
மாணவர்கள் தமிழகத்தை அழிவில் இருந்து காக்க வரவேண்டும் என்று பட்டுகோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் வைகோ பேசினார்.
பட்டுக்கோட்டை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பட்டுகோட்டையில் வைகோ தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது

இதில் ம.தி.மு.க, தி.மு.க, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்,

ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் மகாராஷ்ராவில் ஆலைக்கு எதிராக பொது மக்கள் ஒன்று கூடி போராடியது போல் போராட்டம் நடக்கும். லட்சக்கணக்கான மக்கள் எதிர்த்து போராடும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரவை எப்படி அனுமதி அளித்தார்கள். மக்களை அழிக்க நினைக்கும் போது நான் மீண்டும் ஊர்-ஊராக வந்து மக்களை திரட்டுவேன். மாணவர்களை திரட்டுவேன், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தின் மீது அக்கறை உள்ள பொது மக்களை திரட்டுவேன்,

என் போராட்டத்திற்காக தீக்குளித்த 4 பேரின் படத்திறப்பு 24- ந் தேதி நடக்கிறது. இதில் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்களை அழைத்துள்ளது தீக்குளிப்பு சம்பவத்தை ஊக்கப்படுத்த அல்ல. அவர்களின் தியாகத்தை மதிப்பதற்காக தான்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகம் புதிகாக அணைக்கட்ட முடியாது, தண்ணீர் வரும். பிரதமர் அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க மறுத்து 7.5 கோடி மக்களை உதாசீனப்படுத்தி விட்டார். நான் ஒன்றும் துறவி அல்ல லட்சியத்திற்காக, கொள்கைக்காக வாழ்பவன், பிரதமர் ஆட்சி காலம் எண்ணப்பட்டு வருகிறது. விரைவில் அவர் செல்லாத 27 நாடுகளுக்கும் சென்று வந்து விட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து பிரதமர் தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தமிழகத்தை அழிவில் இருந்து காக்க வரவேண்டும்.

கிராமத்தை தத்தெடுக்க சிலர் (கமல்) கிளம்பிவிட்டனர். ஆனால் சிலர் அவர் ஓட்டு கேட்காமல் சுற்றுப்பயணம் செய்வதாக கூறுகின்றனர். ஆனால் நான் ஓட்டுக்கேட்காமல் பல ஆயிரம் கிலோமீட்டர் சுற்றுபயணம் செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News