செய்திகள்

கொடைக்கானலில் சாலையில் உலா வரும் காட்டெருமைகளால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2018-04-27 11:11 GMT   |   Update On 2018-04-27 11:11 GMT
கொடைக்கானல் பகுதியில் சாலையில் உலா வரும் காட்டெருமைகளால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

பெருமாள் மலை:

கொடைக்கானல் வனப் பகுதியில் காட்டெருமை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக காட்டெருமைகள் கொடைக் கானல் பஸ் டெப்போ அருகே நிரந்தரமாக தங்கியுள்ளது.

இந்த காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக நகர் பகுதியில் உலா வருவதால் வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் சாலையின் குறுக்கே சென்று வருவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

வத்தலக்குண்டு சாலையில் மூஞ்சிக்கல் அருகே காட்டெருமைகள் கூட்டமாக உலா வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் நெடுந்தூரம் தள்ளியே தங்கள் வாகனங் களை நிறுத் தினர்.

அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி காட்டெரு மைகளை விரட்டினர். அதன் பின்பே போக்குவரத்து சீரானது. அப்பகுதியில் தங்கி இருக்கும் பொதுமக்களும் நீண்ட நேரம் காத்திருந்து சென்றனர். மேலும் பலர் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்து வீடுகளி லேயே முடங்கியுள் ளனர்.

இதேபோல் மச்சூர் மலைப்பகுதியில் மிளா மான் குட்டி சாலையில் வெகுநேரம் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. வன விலங்குகள் ஊருக்குள் புகாமல் இருக்க வனப் பகுதியிலேயே புல்வெளிகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews

Tags:    

Similar News