செய்திகள்

நிர்மலாதேவி வழக்கு- காமராஜர் பல்கலைக்கழக கேமரா பதிவுகள் ஆய்வு

Published On 2018-04-24 08:31 GMT   |   Update On 2018-04-24 11:08 GMT
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்மலாதேவி தங்கி இருந்த மற்றும் வந்து சென்ற சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்கின்றனர். #NirmalaDevi
நாகமலை புதுக்கோட்டை:

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தேவைக்கு அழைத்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருப்புக்கோட்டையில் உள்ள நிர்மலாதேவியின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

நேற்று உதவி பேராசிரியர் முருகன் உள்ளிட்ட சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நிர்மலாதேவி தொடர்பான ஆவணங்களை சேகரிக்கும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.


அதன்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்மலாதேவி தங்கி இருந்த மற்றும் வந்து சென்ற போது உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்வதற்காக போலீசார் எடுத்து சென்றனர்.

துணைவேந்தர் அறை, பதிவாளர் அறை, தேர்வு கட்டுப்பாட்டு அறை, நிர்மலாதேவி தங்கி இருந்த மாணவிகள் விடுதி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டு இருந்த கேமரா பதிவுகளை அதிகாரிகள் ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளனர். #NirmalaDeviAudio
Tags:    

Similar News