செய்திகள்

10 ரூபாய் நாணயங்களை பெற மறுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு

Published On 2018-04-22 02:54 GMT   |   Update On 2018-04-22 02:54 GMT
10 ரூபாய் நாணயங்களை பெற மறுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
சென்னை:

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த பழனி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘திருத்தணி பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் தேனீர் அருந்திவிட்டு 10 ரூபாய் நாணயத்தை வழங்கியபோது, அதை கடைக்காரர் பெற மறுத்துவிட்டார். இதனால் பெரும் தகராறு ஏற்பட்டது. இதேபோல சென்னையை தவிர, பிற மாவட்டங்களிலும் 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் பெறுவதில்லை என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளன. ஆனால், இந்த நாணயம் செல்லும் என்று ரிசர்வ் வங்கி பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே 10 ரூபாய் நாணயத்தை பெற மறுப்பவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல 10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கவை என கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 
Tags:    

Similar News