செய்திகள்

மின் கட்டண உயர்வை வாபஸ் பெற கோரி 10 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

Published On 2018-04-12 12:11 GMT   |   Update On 2018-04-12 12:11 GMT
மின் கட்டண உயர்வை வாபஸ் பெற கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதுவையில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி:

மின் கட்டண உயர்வை வாபஸ் பெற கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதுவையில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி புதுவை உப்பளம் தலைமை மின் துறை அலுவலகம் முன்பு புதுவை நகரம் மற்றும் முதலியார் பேட்டை, நெல்லித்தோப்பு தொகுதி குழு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர்கள் ஏகாம்பரம், தமிழரசன், ஏழுமலை, சுப்பிரமணி ஆகி யோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தை மாநில செயலாளர் சலீம் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோ‌ஷம் எழுப்பினர்.

இதுபோல் ரெயின்போ நகர் மின்துறை அலுவலகம் முன்பு தொகுதி செயலாளர் துரை.செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் மாதவராமன், மார்க்ஸ் ஜெகா, தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் விசுவநாதன் கண்டன உரையாற்றினார்.

தட்டாஞ்சாவடி தொகுதி குழு சார்பில் பாக்கமுடையான்பட்டு தாகூர் நகர் மின்துறை அலு வலகம் முன்பு நிர்வாக குழு உறுப்பினர் சேதுசெல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொகுதி செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.

இது போல் அரியாங்குப்பம், பாகூர், வில்லியனூர், திருவாண்டார் கோவில், காட்டேரி குப்பம், காலாப்பட்டு, ஜவகர்நகர் உள்ளிட்ட 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News