செய்திகள்

மேலூர் அருகே இன்று காலை ஷேர்ஆட்டோ கவிழ்ந்து 10 பேர் காயம்

Published On 2018-04-11 09:43 GMT   |   Update On 2018-04-11 09:43 GMT
மேலூர் அருகே இன்று காலை ஷேர்ஆட்டோ கவிழ்ந்து 10 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலூர்:

மேலூர் அருகே உள்ளது கருங்காலக்குடி. இங்கிருந்து 10 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஷேர்ஆட்டோ இன்று காலை மேலூருக்கு புறப்பட்டது.

வஞ்சி நகரம் அருகே வந்தபோது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் ஷேர்ஆட்டோவின் பின்புறம் மோதியது. இதில் நிலைதடுமாறி ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த குன்னாரம்பட்டியை சேர்ந்த நதியா (வயது 35), இவரது மகன் குண சேகரன் (5), ராஜா (40), துவரங்குறிச்சியை சேர்ந்த கயல் (2) உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர் அயன்ராஜ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் 5 பேர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொள்வதாக கூறி சென்று விட்டனர்.

தும்பைப்பட்டியில் ஒரே ஒரு 108 ஆம்புலன்சுதான் உள்ளது. இது சில நேரங்களில் பழுதாகி விடுகிறது. இன்று நடந்த ஷேர் ஆட்டோ விபத்தின்போது 108 ஆம்புன்சு பழுதால் வரவில்லை. இதனால் சிங்கம்புணரியில் இருந்து வேறொரு ஆம்புலன்சு வந்து காயம் அடைந்தவர்களை கொண்டு சென்றது. இதனால் ஒரு மணி நேரம் காலதாமதம் ஆனது.

எனவே தும்பைப் பட்டிக்கு மேலும் ஒரு 108 ஆம்புலன்சு தேவை என கிராம மக்கள் கூறினர்.

Tags:    

Similar News