செய்திகள்

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்தது

Published On 2018-04-05 13:57 GMT   |   Update On 2018-04-05 13:57 GMT
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சென்னையில் சிகிச்சை பெற்று வந்த சுவேதா இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். #TheniFire
சென்னை:

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த மாதம் 11-ம் தேதி மாலை தீப்பிடித்தது. இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிகொண்டனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் சடலமாக மறுநாள் மீட்கப்பட்டனர்.

மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்திருந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அணுவித்யா சிகிச்சை பலனின்றி கடந்த 15-ம் தேதி பரிதாபமாக மரணமடைந்தனர்.

மறுநாளில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த சத்யகலா மற்றும் சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதே மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சாய் வசுமதி சிகிச்சை பலனின்றி மறுநாளில் உயிரிழந்தார்.

அடுத்தடுத்த நாட்களில் மேலும் சிலர் பலியாக பலி எண்ணிக்கை 22 ஆனது. இந்நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுவேதா இன்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. #TheniFire 
Tags:    

Similar News