செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

Published On 2018-03-23 11:03 GMT   |   Update On 2018-03-23 11:03 GMT
தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தி ஏப்ரல் 30-ம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #educationfees #maduraihighcourt #privateschools
மதுரை:

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் முறையாக கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் கூறி ஹக்கிம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அரசுக் கல்வி கட்டணம் நிர்ணயிக்கும் வரை அந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ள 10 ஆயிரம் பள்ளிகளில் 5500 பள்ளிகளுக்கான கல்விக்கட்டணத்தை நிர்ணயித்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மீதமுள்ள தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை அரசு முறைப்படுத்தி ஏப்ரல் 30-ம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  #tamilnews #educationfees #maduraihighcourt #privateschools 
Tags:    

Similar News