செய்திகள்

தீ விபத்து சேதம் - மீனாட்சி அம்மன் கோவிலில் நிபுணர்கள் குழு மீண்டும் ஆய்வு

Published On 2018-03-21 09:51 GMT   |   Update On 2018-03-21 09:51 GMT
தீ விபத்தினால் சேதம் அடைந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நிபுணர்கள் குழு மீண்டும் ஆய்வு செய்தனர்.
மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டபத்தின் பெரும் பகுதிகள் சேதம் அடைந்தன. மேலும் அங்கிருந்த கடைகளும் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கோவிலில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. மேலும் புது மண்டபத்திலும் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

தீ விபத்தில் சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தை பழமை மாறாமல் சீரமைக்க 12 பேர் கொண்ட சிறப்பு வல்லுனர் குழுவை தமிழக அரசு நியமித்தது. இந்த குழுவினர் தீ விபத்து நடந்த பகுதியினை ஆய்வு செய்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் தலைமையில் சிறப்பு வல்லுனர் குழுவினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை, மாநகராட்சி அதிகாரிகள், சிற்பிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் குழுவினர் வீரவசந்தராயர் மண்டபத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தனர். #tamilnews

Tags:    

Similar News