செய்திகள்

ஜெயிலுக்குள் செல்போன் எடுத்து சென்றதை அனுமதித்த வார்டன் சஸ்பெண்டு

Published On 2018-03-20 12:03 GMT   |   Update On 2018-03-20 12:03 GMT
புதுவை காலாப்பட் மத்திய ஜெயிலில் செல்போன் எடுத்து சென்றதை அனுமதித்த வார்டனை சஸ்பெண்டு செய்து சிறை துறை ஐ.ஜி. பங்கஜ்குமார்ஜா உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை காலாப்பட்டில் மத்திய ஜெயில் உள்ளது. இந்த ஜெயிலில் கைதிகளை பார்க்க வரும் அனைவரும் கடும் சோதனைக்கு உட்பட்டே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த நிலையில் கடந்த வாரம் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி சார்பில் ஜெயிலில் கைதிகளுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

அப்போது மருத்துவ முகாமில் பங்கேற்ற டாக்டர்கள், நர்சுகள் செல்போன் வைத்திருந்தனர். இதனை கண்டு சிறை ஐ.ஜி. பங்கஜ்குமார்ஜா அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார். அப்போது ஜெயில் வாயிலில் சோதனையில் ஈடுபட்ட வார்டன் செல்வம் என்பவர் மருத்துவ குழுவினரை சோதனை நடத்தாமல் ஜெயிலுக்குள் அனுமதித்து இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பணியில் அஜாக்கிரதையாக இருந்த வார்டன் செல்வத்தை சஸ்பெண்டு செய்து சிறை துறை ஐ.ஜி. பங்கஜ்குமார்ஜா உத்தரவிட்டுள்ளார். #tamilnews
Tags:    

Similar News