செய்திகள்

தனியார் மருத்துவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்ட திருத்தம் சட்டசபையில் தாக்கல்

Published On 2018-03-20 08:18 GMT   |   Update On 2018-03-20 08:18 GMT
தனியார் மருத்துவ நிறுவனங்களை முறைப்படுத்தும் சட்ட முன் வடிவை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டசபையில் தாக்கல் செய்தார். #TNAssembly
சென்னை:

சட்டசபையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனியார் மருத்துவ நிறுவனங்களை முறைப்படுத்தும் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்ய சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

அந்த சமயத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபையில் கோ‌ஷம் எழுப்பி கொண்டிருந்தனர். அந்த கூச்சலுக்கு இடையே அந்த சட்ட முன் வடிவை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். #TNAssembly
Tags:    

Similar News