செய்திகள்

கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - கமல்ஹாசன் அறிவிப்பு

Published On 2018-03-08 14:31 GMT   |   Update On 2018-03-08 15:03 GMT
திருச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். #KamalHassan #MNM #Usha #InternationalWomensDay

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில்  இன்று மகளிர் தினத்தையொட்டி ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.



அப்போது அவர் பேசியதாவது,

தாய் சொல்லை தட்டாதவன் நான், அதனால்தான் இந்த மேடையில் நிற்கிறேன். மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நீதியும், நியாயமும் புரியும். பெண்களை மதிக்கச் சொல்லிக் கொடுத்தவர் என் தாய். வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை, அதைச் சொல்லாமல் சொன்னவர் என் தாய். எனக்கு புடவை கட்டத்தெரியும், நான் அதை மீசையை முறுக்கிச் சொல்வேன். உனக்கு பெண்களைப் பற்றி என்ன தெரியும் எனக் கேட்கிறார்கள். எனக்கு புரிந்து கொள்ளத் தெரியும். திருச்சியில் உஷா மரணத்தில் அநீதி நிகழ்ந்துள்ளது, நீதியைக் காக்க வேண்டியவர்கள் அநீதியை செய்துள்ளனர். சிறப்பாக செயல்படும் காவலர்களை பாராட்டாமல், தவறாக செயல்படும் காவலர்களை தண்டிக்க முடியாது. அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிய விஷயம் தெரிந்தவர்கள், மய்யத்திற்கு வாருங்கள். தமிழகத்தின் நலன் அதன் வளம் என்பதே எங்களின் முதல் கொள்கை. கட்சியின் திட்டங்கள் மாறினாலும், கொள்கைகள் மாறாது.  எதையும் ஆராயாமல் கருத்து சொல்வது என வேலையல்ல.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

திருச்சியில் போலீசாரின் வாகன சோதனையின் போது உயிரிழந்த உஷாவின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என கமல்ஹாசன் அறிவித்தார். #KamalHassan #MNM #Usha #InternationalWomensDay
Tags:    

Similar News