செய்திகள்

பெரம்பலூரில் நாளை அம்மா திட்ட முகாம்: கலெக்டர் தகவல்

Published On 2018-02-22 11:11 GMT   |   Update On 2018-02-22 11:11 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் 23.02.2018 அன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் வருவாய் கிராமங்களின் விபரம் குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் 23.02.2018 அன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் வருவாய் கிராமங்களின் விபரம் குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

இந்த முகாம்களில் பொது மக்கள் அளிக்கும் பட்டா மாறுதல்கள் (உட் பிரிவு இல்லாத இனங்கள்), சிட்டா நகல்கள், ஆதார் அட்டைகள் பெற பதிவுகள் செய்தல், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் மற்றும் பல சேவை மனுக்கள் ஆகியவை அன்றைய தினமே உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக முகாம் நடைபெறும் இடங்களில் இணையதள இணைப்புடன் கூடிய கணினி வசதி, பிரிண்டர் ஆகிய வசதிகள் செய்யப்பட உள்ளன. முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுகின்றன. உடனடியாக முடிவு செய்ய இயலாத விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.

23.02.2018 அன்று வேப்பந்தட்டை வட்டத்தில் மேட்டுப் பாளையம் (தெற்கு), குன்னம் வட்டத்தில் பேரளி (தெற்கு) மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் ஆதனூர் (தெற்கு) ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன. இதில் பொது மக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். #Tamilnews
Tags:    

Similar News