செய்திகள்

கமல்ஹாசனின் புதிய இமேஜ்

Published On 2018-02-22 06:52 GMT   |   Update On 2018-02-22 06:52 GMT
புதிய கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசன் தனக்கென புதிய இமேஜை உருவாக்கியுள்ளார். அவருக்கு 5 வி‌ஷயங்கள் மிகவும் பிளஸ்பாயிண்டுகளாக அமைந்துள்ளன. #KamalHaasan #MakkalNeedhiMaiam
சென்னை:

புதிய கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசன் தனக்கென புதிய இமேஜை உருவாக்கியுள்ளார். அவருக்கு 5 வி‌ஷயங்கள் மிகவும் பிளஸ்பாயிண்டுகளாக அமைந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

1. பதட்டம் இல்லை:

நேற்று காலை முதல் இரவு வரை கமல் மிகவும் பரபரப்பாக இருந்தார். காலையில் அப்துல்கலாம் வீட்டுக்கு சென்ற முதல் நிகழ்ச்சியில் இருந்து கட்சி தொடங்கி ரசிகர்களின் மத்தியில் பேசி பொதுக்கூட்டத்தை நிறைவு செய்யும் வரை அவர் மிகவும் பரபரப்பாகவே இருந்தார். ஆனால் அவரிடத்தில் கொஞ்சம் கூட பதட்டம் காணப்படவில்லை. அப்துல்கலாம் வீட்டு நிகழ்ச்சியை முடித்ததும் அவர் படித்த பள்ளிக்கு கமல் சென்றார். அங்கு உள்ளே அனுமதிக்காததால் வெளியில் இருந்து பார்த்து விட்டு சென்றார்.

பின்னர் அப்துல்கலாம் நினைவிடம், ராமேசுவரத்தில் மீனவர்களுடன் சந்திப்பு, பத்திரிகையாளர் சந்திப்பு, மாலையில் பொதுக்கூட்டம் என வரிசையாக நிகழ்ச்சிகள் இருந்தும் அவர் கொஞ்சம் கூட பதட்டப்படவில்லை. அதே நேரம் உற்சாகம் குறையாமல் பரபரப்பாக செயல்பட்டார்.

2. நிதானம்:

பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஒரே நாளில் வைத்துக் கொண்டாலும் கூட கமல் மிகவும் நிதானமாகவே செயல்பட்டார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் நன்கு திட்டமிட்டு நடத்தியதால் அவர் எல்லா நிகழ்ச்சிகளையும் பொறுமையாகவே எதிர் கொண்டார். அதற்கு டைரக்டர் என்ற தொழிலும் அவருக்கு உறுதுணையாக இருந்தது. பொதுக்கூட்டத்தின்போது கட்சி பெயரை அறிவித்தது, கொடியை அறிமுகப்படுத்தியது, சிறப்பு விருந்தினர்கள், புதிய நிர்வாகிகளை மேடைக்கு அழைத்தது என எல்லா வி‌ஷயங்களிலும் மிகவும் நிதானமாக இருந்தார்.


3. கோபம் இல்லை:


மிகுந்த பரபரப்புக்கிடையே கமல்ஹாசன் நேற்று கொஞ்சம் கூட கோபப்படவில்லை. அவர் எல்லாவற்றையும் சிரித்தபடியே எதிர்கொண்டார். மதியம் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார். கோபமூட்டும் வகையில் கேட்ட கேள்விகளுக்கும் அப்படியா என்று சிரித்தபடியே விளக்கம் அளித்தார். பொதுக்கூட்டத்தில் ரசிகர்கள் எழுதிப் போட்ட கேள்விகள் பல தன்னை விமர்சனம் செய்வது போல் இருந்தாலும் அதற்காக கோபப்படாமல் சிரித்துக் கொண்டே ரசிகர்களுக்கு புரியும் விதத்தில் தனக்கே உரிய பாணியில் பதில் அளித்தார். எந்த இடத்திலும் அவர் கோபத்தை வெளிப்படுத்தவே இல்லை. இது அவரது இமேஜை உயர்த்திக் காட்டியது.


4. தெளிவு:

கட்சி தொடக்க விழாவில் கமல் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும்போது அவர் எதிலும் தெளிவாக சிந்தித்து முடிவு எடுக்கக் கூடியவர் என்பது கண்கூடாக தெரிந்தது. ஊழலை ஒழிப்பது, வேலை வாயப்பு ஏற்படுத்தி கொடுப்பது பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது என எல்லா கேள்விகளுக்கும் கமல் தெளிவாக பதில் அளித்ததுடன் இந்த வி‌ஷயங்களில் அவருக்குள்ள தெளிவையும் வெளிப்படுத்தினார். ரசிகர்களை கையாள்வதிலும் அவர் தெளிவாக நடந்து கொண்டார்.

5. கவர்ச்சியான முகம்:

கமல்ஹாசனின் உருவ அமைப்பு அவரது கட்சிக்கு மிகுந்த பலம் சேர்க்கக்கூடிய அம்சம். அதிலும் அவரது கவர்ச்சியான முகம் ரசிகர்களை மட்டுமல்ல பொதுமக்களையும் கவரும். அவரது முக பாவனையே ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலாக அமைந்தது. கவர்ச்சியான முகத்துடன் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் வென்றும் காட்டியுள்ளனர். அந்த வரிசையில் கமல்ஹாசனின் முகமும் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிடிக்கும் கவர்ச்சியான முகம் ஆகும். #KamalHaasan #Tamilnews
Tags:    

Similar News