செய்திகள்

சட்டசபையில் ஜெயலலிதா படம் திறந்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு

Published On 2018-02-12 05:55 GMT   |   Update On 2018-02-12 05:55 GMT
தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #Jayalalithaa #TNassembly #DMK
சென்னை:

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் இன்று திறக்கப்பட்டது. நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் படத்தை சட்டப்பேரவையில் திறக்கக்கூடாது என தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. படத்திறப்பு விழாவையும் புறக்கணித்தன.



இந்நிலையில், சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு தாக்கல் செய்துள்ளது. தி.மு.க மூத்த வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்த இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு எதிரான வழக்கு கடந்த 29ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், விசாரணைக்கு வரவில்லை. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது எடப்பாடி அரசு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறந்ததாக வில்சன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். #Jayalalithaa #TNassembly #DMK #tamilnews
Tags:    

Similar News