செய்திகள்

திப்புராயப்பேட்டையில் பெண்ணை மானபங்கம் செய்த மீனவர் கைது

Published On 2018-02-08 12:46 GMT   |   Update On 2018-02-08 12:46 GMT
திப்புராயப்பேட்டையில் பணம் கொடுக்காத ஆத்திரத்தில் பெண்ணை மானபங்கம் செய்த மீனவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

புதுவை திப்புராயப்பேட்டை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 32). இவர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார்.

இவருக்கும், வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த மீனவர் ரஞ்சித் (42) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பணம் கொடுக்கல்- வாங்கல் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று புவனேஸ்வரி சுய உதவி குழு பணத்தை வங்கியில் செலுத்தி விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ரஞ்சித் வழிமறித்து புவனேஸ்வரியிடம் பணம் கடன் கேட்டார்.

அதற்கு புவனேஸ்வரி பணம் முழுவதையும் வங்கியில் செலுத்தி விட்டதாக தெரிவித்தார். ஆனால், ரஞ்சித் அதனை ஏற்காமல் புவனேஸ்வரியை கீழே பிடித்து தள்ளி அவரை மானபங்கம் செய்ய முயன்றார்.

அதோடு கத்தியை எடுத்து தாக்க பாய்ந்தார். அப்போது புவனேஸ்வரி அலறியதால் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனை பார்த்ததும் ரஞ்சித் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து புவனேஸ் வரி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர். #tamilnews

Tags:    

Similar News