செய்திகள்

திருச்செங்கோடு பகுதியில் ரே‌ஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு

Published On 2018-02-05 14:47 GMT   |   Update On 2018-02-05 14:47 GMT
திருச்செங்கோடு பகுதியில் உள்ள ரே‌ஷன் கடைகளில் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.
எலச்சிப்பாளையம்:

திருச்செங்கோடு வட்டத்திற்கு உட்பட்ட ரே‌ஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார். அப்போது இளநகர் ரே‌ஷன் கடை, மானத்தி, லத்துவாடி, கூத்தம்பூண்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள ரே‌ஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்து அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறித்தும், தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும் விற்பனை செயலி கருவியில் பதிவு செய்யப்பட்ட இருப்பினையும், ரே‌ஷன் கடையில் வைக்கப்பட்டு உள்ள பொருட்களின் இருப்பினையும் அவர் சரி பார்த்தார். அப்போது கடைகளில் பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்களிடம் ஸ்மார்ட் கார்டுகளுக்கு போதுமான அளவு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகின்றதா? என கேட்டறிந்தார்.

மேலும் ஸ்மார்ட் கார்டுதாரர்களுக்கு தரமாகவும், எடையளவு குறையாமலும் தகுதியின் அடிப்படையில் முழுமையாக பொருட்களை வழங்கிட வேண்டும் என விற்பனையாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பர்ஹத் பேகம், திருச்செங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் மதியழகன் உட்பட வழங்கல் துறை அலுவலர்கள் உடனிருந்தனர். #tamilnews
Tags:    

Similar News