என் மலர்
நீங்கள் தேடியது "Tiruchengode"
- விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
திருச்செங்கோடு:
திருச்சி அரியமங்கலத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள மாசி பெரியண்ணசாமி கோவிலில் சாமி கும்பிட 5 பேர் ஒரு காரில் வந்தனர். பின்னர் அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு திருச்செங்கோட்டில் உள்ள நண்பர் ஒருவரை பார்க்க வந்தனர்.
திருச்செங்கோட்டில் நண்பரை பார்த்துவிட்டு மீண்டும் அவர்கள் திருச்சி அரியமங்கலத்துக்கு புறப்பட்டனர். இரவு 8 மணியளவில் கார் திருச்செங்கோடு உஞ்சனை அருகே சென்றது.
அப்போது காரை ஓட்டிவந்த யுவராஜன் என்பவர் தூங்கி உள்ளார். இதனால் நிலை தடுமாறிய கார் பஸ் நிறுத்தம் அருகே இருந்த தள்ளுவண்டி கடை மீது மோதியது. மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் மற்றும் மொபட் மீதும் மோதி இழுத்து சென்றது.
பின்னர் இந்த பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த முருகேசன் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து கொண்டு கார் வீட்டுக்குள் நுழைந்தது. அப்போது வீட்டுக்கு முன்பு அமர்ந்திருந்த முருகேசன் (67) என்பவர் மீது கார் மோதி நின்றது. இதில் சம்பவ இடத்திலேயே நாற்காலியில் அமர்ந்தபடி முருகேசன் பலியானார்.
இதுபற்றி தெரிய வந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் ஓடி வந்தனர். பின்னர் காரில் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் கார் டிரைவர் யுவராஜன் மற்றும் காரில் பயணித்த சரவணன் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். பின்பக்கம் அமர்ந்திருந்த 3 பேர் காயமின்றி தப்பினர்.
இதுபற்றி தெரிய வந்ததும் திருச்செங்கோடு ஊரக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான முருகேசன் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- மலைப் பாதை ஓரத்தில் தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டுள்ளது.
- மாற்றுப்பாதை வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு படி வழியாக ஏறிச் செல்ல ஒரு வழியும், வாகனங்களில் செல்ல ஏதுவாக மலைப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
மலைப் பாதை ஓரத்தில் தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக வந்து செல்லும் வாகனங்கள் குறைந்த வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே பாதுகாப்புக்காக குவி லென்சுகளும் பொருத்தப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3.30 மணி முதல் காலை 6 மணி வரை மரகத லிங்க தரிசனம் நடைபெறும். இதைக்காண அதிகாலை நேரத்திலேயே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
அதேபோல் இன்று காலை திருச்செங்கோடு சீதாராம்பாளையம் பகுதியை சேர்ந்த தரம்ஸ்ரீ என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் காரில் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.
அதிகாலை நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் எதிர்பாராத விதமாக தடுப்பு சுவர் மீது ஏறி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர்கள் 3 பேரும் தப்பினர்.
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரை கிரேன் உதவியுடன் மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
மலைப் பாதையில் முகூர்த்த நாட்கள் மற்றும் திருவிழா நாட்களில் மலைக்குச் செல்பவர்கள் அதிகமாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாற்றுப்பாதை வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து ரோப் கார் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆய்வு செய்தபோது ரோப் கார் அமைக்க ஏதுவான இடமில்லை என திட்டம் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து மாற்றுப் பாதை வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அணிமூர் கிராமத்தில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.
இந்த குப்பை கிடங்கை சுற்றி ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த நிலையில் குப்பை கிடங்கில் கொட்டப்படும் கழிவுகள் மூலமாக பல்வேறு நோய்கள் பரவுவதாகவும், எனவே, குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் எனவும் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் வாக்களிப்பை புறக்கணித்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த வருவாய் கோட்டாட்சியர் மணிராஜ், அணிமூர் கிராமத்திற்கு சென்று அவர்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தினார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வையப்பமலையில் தனியார் வங்கி கிளை ஒன்று இயங்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் வங்கியில் திடீரென தீப்பிடித்து, கரும்புகை குபு, குபு வென வெளியே வந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனே வங்கியில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், வங்கியின் முன்பக்க கதவு மூடப்பட்டிருந்ததால் உட்புறம் பிடித்த தீயை அணைக்க முடியவில்லை.
இதனால் வங்கி மேலாளர் சமீர் மற்றும் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் தீ மளமளவென பரவி வங்கியில் இருந்த கணினி, ஏ.சி., மேசை, நாற்காலி, தளவாடச் சாமான்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்தது. இப்பொருட்களின் சேதமதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று வங்கி தரப்பில் கூறப்படுகிறது.
தீ விபத்தில் வங்கியில் இருந்த சுமார் 20 லட்சம் பணம் தப்பியது. மேலும் அடமானத்திற்கு வாங்கி வைத்திருந்த நகைகள், தனி லாக்கரில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த பொருட்கள் பத்திரமாக இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தெரியவில்லை. இது குறித்து எலச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #BankFire
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு சிலர் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நேற்று மாலை நாமக்கல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் 10 பேர் கொண்ட குழுவினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.
இச்சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் ஆகியோர் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அவர்கள் அனைவரும் அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தனர். அலுவலகத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். பின்னர் பூட்டிய அறைக்குள் சோதனை நடந்தது. அங்கிருந்த கோப்புகள், ஆர்.சி.புக், மேஜை அறை, உணவு பாக்ஸ் மற்றும் கழிப்பிடங்களை சோதனை செய்தனர்.
மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்த அனைவரையும் தனித்தனியாக போட்டோ எடுத்து பதிவு செய்தனர். விடிய, விடிய இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது கட்டு, கட்டாக கணக்கில் வராத பணம் சிக்கியது. ஆர்.டி.ஓ. ஆபிசில் இருந்த அலுவலர்கள் மற்றும் அவர்களது இருக்கையில் இருந்த ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஆபீஸ் கழிவறையில் வீசப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 3½ லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஊஞ்சனையை அடுத்த குட்டிக்காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டுவேல் (வயது 53), ரிக் வண்டி டிரைவர்.
இன்று காலை இவர் ஊஞ்சனையில் இருந்து குட்டிக்காபாளையத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். நாமக்கல் - திருச்செங்கோடு 4 வழிச்சாலையில் குட்டிக்காபாளையம் பிரி வில் செங்கோட்டுவேல் வலதுபுறம் செல்வதற்காக தனது மொபட்டை திருப்பினார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மொபட் மீது பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த செங்கோட்டுவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து பற்றி அறிந்ததும் திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செங்கோட்டுவேல் பிணத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் குட்டிக்காபாளையம் பிரிவு பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் உயரமாக இருப்பதால் இதுபோன்ற விபத்துக்கள் நிகழ்வதாகவும் கூறி அப்பகுதி பொதுமக் கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இனிமேல் விபத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து காரை ஓட்டி வந்த பரமத்திவேலூர் இருக்கூர் பகுதியைச் சேர்ந்த அருள்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் திருப்பூரில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்செங்கோடு:
நாமக்கல் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் முத்துசாமி தலைமையில் நடந்தது. நகர செயலாளர் சின்னதம்பி வரவேற்றார். வடக்கு மாவட்ட பொருளார் ஈஸ்வரன், துணை செயலாளர்கள் பொங்கியண்ணன், விஜய கமல், ராஜா, தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் களாக கட்சியின் மாநில அவைத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அழகாபுரம் மோகன்ராஜ், மாநில ஆலோசனைக் குழு செயலாளர் வெங்கடேசன், கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களையும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் ஆலோசித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய தே.மு.தி.க. கட்சியின் மாநில அவைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. அழகாபுரம் மோகன்ராஜ் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியதில் முக்கிய காரணம் தி.மு.க. தலைவர் கருணாநிதி தான் 1974-ல் காவிரி ஒப்பந்தந்தை புதுப்பித்து இருந்தால் இந்த நிலை வந்திருக்காது.
அ.தி.மு.க. பல துண்டுகளாக உடைந்துள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.க்கள் பதவி நீக்கம் குறித்த தீர்ப்பு வந்தால் ஆட்சி இருக்காது என்ற நிலையில் மோடியின் தயவால் எடப்பாடி அரசு நீடிக்கிறது.
பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் உருவாகும் சூழ்நிலை உள்ளது. நமது வாக்கு வங்கி அப்படியே தான் உள்ளது. அதனை ஒருங்கிணைக்க கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்.
எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் உழைப்பவர்கள் தே.மு.தி.க. தொண்டர்கள் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.






