செய்திகள்

பழனி உழவர் சந்தையில் சாதனை: ஒரே நாளில் ரூ.6 லட்சத்துக்கு காய்கறி விற்பனை

Published On 2018-01-13 08:12 GMT   |   Update On 2018-01-13 08:12 GMT
பழனி உழவர் சந்தையில் பொங்கலையொட்டி ஒரேநாளில் ரூ.6 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது.

பழனி:

பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை பழனி உழவர்சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒட்டன்சத்திரத்திற்கு அடுத்து பொதுமக்கள் இங்கு அதிகளவில் பொருட்கள் வாங்கிச்செல்கின்றனர். நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து தைப்பூச விழாவும் வர இருக்கிறது.

இதனால் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று ஒரேநாளில் மட்டும் 22,213 டன் காய்கறிகள் விற்பனையானது.

இன்று ஒரே நாளில் மட்டும் காய்கறிகள் மொத்தம் ரூ.5,82,444-க்கு விற்பனையானது. சின்னவெங்காயம் ரூ.58, பல்லாரி ரூ.48, புதினா ரூ.70, மொச்சை ரூ.50, அவரை ரூ.10, முள்ளங்கி ரூ.10, தக்காளி ரூ.8, பூசணிக்காய் ரூ.8, பீன்ஸ் ரூ.16, பச்சைமிளகாய் ரூ.18, மல்லி ரூ.18 என்ற விலையில் விற்பனையானது.

நாளையும் விற்பனை தொடரும் என்றும், 16-ந்தேதி உழவர்சந்தை விடுமுறை விடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews

Tags:    

Similar News