செய்திகள்

சேலம் நெத்திமேட்டில் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

Published On 2017-12-27 11:08 GMT   |   Update On 2017-12-27 11:08 GMT
சேலம் நெத்திமேட்டில் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் நெத்திமேடு சாய்ராம் நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான சித்ரா பழைய பிளாஸ்டிக் குடோன் செயல்பட்டு வருகிறது.

இந்த பிளாஸ்டிக் குடோனில் இருந்து இன்று அதிகாலை கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த அப்பகுதியினர் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே நிலைய அலுவலர் (போக்குவரத்து) செல்வம் தலைமையில் 2 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் 15 பேர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது.

இதனால் தீயணைப்பு வீரர்கள் அருகில் செல்ல முடியாமல் தவித்தனர். பின்னர் அவர்கள் சற்று தூரத்தில் நின்று குடோனுக்குள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் ஒரு மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது.

இதனால் அக்கம்பக்கம் பரவவிடமால் தீ அணைக்கப்பட்டது. ஆனாலும், பிளாஸ்டிக் குடோனில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலானாது.

இதுகுறித்து தகவலறிந்த கொண்டாலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே அங்கு வந்த ஆறுமுகத்திடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அடுப்பில் பற்ற வைத்த நெருப்பை அணைக்காமல் சென்றதால் அதில் இருந்த தீப்பொறி பறந்து சென்று பிளாஸ்டிக் பொருட்கள் மேல் விழுந்ததால் தீப்பிடித்து இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News