செய்திகள்

வேலூர் அருகே அனுமதியின்றி மாடு விடும் விழா - 4 பேர் மீது வழக்கு

Published On 2017-12-19 04:13 GMT   |   Update On 2017-12-19 04:13 GMT
வேலூர் அருகே அனுமதியின்றி மாடு விடும் விழா நடத்திய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வேலூர்:

வேலூர் அடுத்த ஜி.ஆர். பாளையம் ராஜா வீதியில் அனுமதி பெறாமல் மாடு விடும் விழா நடைபெறுவதாக புதூர் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் சிவன் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அரியூர் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் சிவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அதற்கு முன்பாகவே மாடு விடும் விழா முடிவடைந்து விட்டது.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த செங்குரெட்டி (வயது 67), தாமோதரன் (45), ஆண்டியன் (34), சதீஷ் (25) ஆகிய 4 பேர் தலைமையில் போலீசார் அனுமதியின்றியும், எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமலும் மாடு விடும் விழா நடந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சிவன் அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News