செய்திகள்

தேனி கோர்ட்டில் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம்

Published On 2017-12-13 12:05 GMT   |   Update On 2017-12-13 12:05 GMT
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேனி வக்கீல் சங்க தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் வக்கீல்கள் ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி:

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேனி வக்கீல் சங்க தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் வக்கீல்கள் ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் வக்கீல் சங்க துணைத்தலைவர் ஜெயக்குமார், பொருளாளர் அனந்தசேனன், துணைச் செயலாளர் அழகேந்திரன், பெரியகுளம் வக்கீல் சங்க செயலாளர் சிவசுப்பிர மணியன், பொருளாளர் சன்னாசிபாபு உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் வக்கீல்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கபட்டுள்ள மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். இளம் வக்கீல்களுக்கு உதவி தொகையாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கோர்ட்டுகளில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை நீதிபதியாக நியமிப்பதை தவிர்த்து விட்டு தமிழகத்தை சேர்ந்தவர்களையே நீதிபதியாக நியமிக்க வேண்டும்.

பதிவு விடுபட்ட பிறப்பு-இறப்பு சான்றிதழ் பெறும் நடைமுறையை முன்பு இருந்தது போலவே கோர்ட்டுகள் மூலமே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

இதேபோன்று தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம் ஆகிய கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News