செய்திகள்

பத்திரிகையாளர்கள் கூறியதன் அடிப்படையில் சின்னம் கிடைத்ததாக கூறினேன்: முதல்வர் பழனிசாமி

Published On 2017-11-23 09:49 GMT   |   Update On 2017-11-23 09:49 GMT
இரட்டை இலை சின்னம் தங்களது அணிக்கு கிடைத்துள்ளதாக பத்திரிகையாளர்களின் தகவலை வைத்தே கருத்து கூறினேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார்.
சென்னை:

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடந்து வந்தது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சோதி தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது.

அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் முன்னரே சின்னம் தங்களுக்கு கிடைத்து விட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார்.

இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னரே சின்னம் கிடைத்துள்ளதாக முதல்வர் கூறியது எப்படி? என டி.டி.வி தினகரன் தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தார்.

இதன் பின்னர், பத்திரிகையாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையிலே இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளதாக கூறினேன் முதல்வர் பழனிச்சாமி விளக்கமளித்தார். நிதின் கட்காரியுடன் ஆலோசனைக்கூட்டத்தில் இருந்ததால், தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆணை குறித்து தெரிவியவில்லை என்றும் அவர் கூறினார்.
Tags:    

Similar News