செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்ககூடாது: தமிமுன் அன்சாரி

Published On 2017-11-21 04:32 GMT   |   Update On 2017-11-21 04:32 GMT
தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 ல் தொடங்கி குரூப் 4 வரை எதிலும் வெளிமாநிலத்தவர்களை அனுமதிக்ககூடாது என தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
தென்காசி:

தென்காசியில் மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ நிருபர்களிடம் கூறியதாவது:-

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் வெளிமாநிலத்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் கேரளா மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஏற்கனவே பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணிகள் வங்கித்துறைகள் என வெளி மாநிலத்தவர்களின் ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டது. இப்போது குரூப் 4 தேர்விலும் வெளிமாநிலத்தவர்களை அனுமதித்தால் தமிழ்நாட்டின் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கிடையே வேலையில்லா திண்டாட்டம் உருவாகிவிடும். எனவே மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் தமிழக அரசு செயல்படவேண்டும்.


தமிழகத்தில் 90 லட்சம் பேர் படித்து முடித்து வேலை இல்லாமல் உள்ளனர். எனவே தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 ல் தொடங்கி குரூப் 4 வரை எதிலும் வெளிமாநிலத்தவர்களை அனுமதிக்ககூடாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தலைமை ஒருங்கிணைப்பாளர் மவுலானா நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன், மாநில துணைச் செயலாளர் புளியங்குடி செய்யதலி, நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News