செய்திகள்
சக்கரவர்த்தி

ரூ.5 லட்சம் கேட்டு தொழிலதிபரை கடத்தி கொன்ற 3 பேர் கைது

Published On 2017-11-20 10:15 GMT   |   Update On 2017-11-20 10:15 GMT
பாணாவரம் அருகே தொழிலதிபரை கடத்தி கொன்ற 3 வாலிபர்களை கைது செய்த போலீசார் 3 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:

ராணிப்பேட்டை சிப்காட் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 42). தொழில் அதிபரான இவர், சோளிங்கர் அடுத்துள்ள ஜம்புகுளத்தில் ஊதுவத்தி கம்பெனி வைத்திருந்தார். இவருக்கும் பாணாவரத்தை சேர்ந்த ஏழுமலைக்கும் ஊதுவத்தி எந்திரம் வாங்கி கொடுத்த தகராறில் முன் விரோதம் இருந்தது.

இந்த நிலையில் ரூ.5 லட்சம் கேட்டு ஏழுமலை தலைமையிலான கும்பல் சக்கரவர்த்தியை கடத்தியது. பணம் தர மறுத்ததால் நேற்று முன்தினம் பாணாவரம் ஆயில் சுடுகாட்டு பகுதியில் அவரை அடித்துக் கொலை செய்தனர்.

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப் பட்டது.

நேற்றிரவு பாணாவரம் லட்சுமிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை (21), பாணாவரம் அடுத்த ரங்காபுரம் கவின்குமார் (20), ஆயிலம் விஜயநகரம் பகுதியை சேர்ந்த உமாபதி (21) ஆகிய 3 பேரையும், சக்கரவர்த்தி கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், சுய தொழில் செய்வதற்காக சக்கரவர்த்தியிடம் இருந்து ஊதுவத்தி தயாரிக்கும் எந்திரத்தை வாங்கி பழுதானதில் ரூ.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இந்த பணத்தை கேட்ட தகராறில் அவரை கடத்தி கொன்றதாக ஏழுமலை வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடக்கிறது.


Tags:    

Similar News