செய்திகள்

ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியது வேதனை அளிக்கிறது: கருணாஸ் எம்.எல்.ஏ.

Published On 2017-11-20 08:06 GMT   |   Update On 2017-11-20 08:06 GMT
எனக்கு முகவரி தந்த ஜெயலலிதா வீட்டில் போலீசாரின் பாதுகாப்பை மீறி வருமான வரி சோதனை நடத்தப்பட்டது வேதனை அளிக்கிறது என கருணாஸ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:

முக்குலத்தோர் புலிப்படை பேரவை தலைவர் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரத்தில் நடைபெற்ற பசும்பொன் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்கு போட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கதாகும். இந்த வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.

எனக்கு முகவரி தந்த ஜெயலலிதா வீட்டில் போலீசாரின் பாதுகாப்பை மீறி வருமான வரி சோதனை நடத்தப்பட்டது வேதனை அளிக்கிறது. இதை தமிழக அரசு வேடிக்கை பார்த்தது கண்டிக்கத்தக்கதாகும்.


தமிழக மீனவர்கள் மீது இந்திய அரசு துப்பாக்கி சூடு நடத்தியது அதிர்ச்சியளிக்கிறது. கால போக்கில் வடநாட்டு இந்தியர்கள் தமிழக மீனவர்களை சுட்டு குவித்து விடுவார்களோ? என அச்சப்பட தோன்றுகிறது.

தமிழக கவர்னர் ஆய்வு நடத்தியது மாநில சுயாட்சி உரிமையை பறிக்கும் செயலாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News