search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமானவரித்துறை சோதனை"

    • 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
    • சென்னையில் மணலி, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் 60 இடங்களில் இன்று வருமான வரி சோதனை நடைபெற்றது.

    ஓட்டல் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் 4 நிறுவனங்களை குறிவைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணியில் இருந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையை தலைமையிடமாக கொண்ட அசோக் ரெசிடென்சி ஓட்டலுக்கு சொந்தமான இடங்களுக்கு இன்று காலையில் தனித்தனியாக பிரிந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டனர். பூந்தமல்லி அருகே உள்ள அய்யப்பன் தாங்கலில் அசோக் ரெசிடென்சி ஓட்டலின் தலைமையகம் உள்ளது. இங்கும் அண்ணாநகரிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஓட்டலின் உரிமையாளராக அசோக் என்பவர் உள்ளார்.

    அண்ணா நகர் மேற்கு 6-வது அவென்யூவில் அசோக்கின் வீடு உள்ளது. இவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 3 கார்களில் சென்ற அதிகாரிகள் சரியாக காலை 7 மணிக்கு தங்களது சோதனையை தொடங்கினார்கள். இந்த சோதனையின்போது வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வெளியில் இருந்தும் யாரும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    இதேபோன்று ஆதித்யராம், அம்பாலால் மற்றும் இன்னொரு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் ஆகும். சென்னையில் இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 20 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.

    வேலூரை தலைமையிடமாகக் கொண்டு அம்பாலால் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. குடியாத்தத்தை சேர்ந்த ஜவுரிலால் ஜெயின் இதனை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்டோர் இன்று காலை அம்பாலால் கட்டுமான நிறுவன அலுவலகத்திற்கு வந்தனர். உள்ளே சென்றதும் கதவுகளை அடைத்துவிட்டு சோதனை நடத்தினர். அங்கிருந்த முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தபோது உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. அலுவலகத்தின் வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதன் உரிமையாளர் குடியாத்தம் சந்தைப்பேட்டையில் வசித்து வருகிறார். அங்குள்ள அவரது வீட்டிலும் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் அதிரடியாக நுழைந்தனர். அங்கிருந்த முக்கிய ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினார்.

    இது தொடர்பாக ஜவுரி லால் ஜெயின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆதித்ய ராம் குழுமத்துக்கு சொந்த மாக ரெசிடென்சி உள்ளிட்டவைகளும் உள்ளன. கிழக்கு கடற்கரை சாலை கேளம்பாக்கத்தில் உள்ள ரெசிடென்சி மற்றும் புதுப்பாக்கத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    அசோக் ரெசிடென்சி ஓட்டல், ஆதித்யராம் குழு மம், அம்பாலால் உள்ளிட்ட 4 நிறுவனங்களும் சொத்துக்களை வாங்கியதில் முறைகேடு செய்திருப்பதாகவும் வருமான வரி கணக்குகளை சரியாக காட்டவில்லை என்றும் வருமான வரி துறைக்கு புகார்கள் வந்துள்ளன.

    இதன் அடிப்படையிலேயே வருமான வரி துறை அதிகாரிகள் இன்று 60 இடங்களை குறிவைத்து ஒரே நேரத்தில் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையின்போது வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரி ஏய்ப்பு செய்திருக்கும் நிறுவனங்கள் எத்தனை கோடியை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளன? என்பது பற்றிய விவரங்களை இன்று மாலையில் வருமான வரித்துறையினர் வெளியிட உள்ளனர். அப்போதுதான் வரி ஏய்ப்பு தொடர்பாக முழுமையான விவரங்கள் தெரிய வரும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • கடந்த 6-ந்தேதி சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6 இடங்களிலும் சோதனை நடந்தது.
    • சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் லேப் டாப்பை போலீசார் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.

    கோவை:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார்.

    கடந்த 6-ந்தேதி சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6 இடங்களிலும் சோதனை நடந்தது. சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் லேப் டாப்பை போலீசார் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.

    கோவை பீளமேட்டில் கே.சி.பி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக சந்திரபிரகாஷ் உள்ளார். இங்கு வருமானவரித்துறை சோதனை நடந்தது.

    நேற்று 3-வது நாளாக கே.சி.பி.நிறுவனம், ஆலயம் அறக்கட்டளையிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. கே.சி.பி. நிறுவனத்தில் 3-வது நாளாக நேற்று காலை தொடங்கிய சோதனையானது விடிய, விடிய நடந்தது. அப்போது அங்கிருந்த பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் சந்திரபிரகாஷின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த சமயம் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் வீடு திரும்பிய அவரிடம் வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று 4-வது நாளாக பீளமேட்டில் உள்ள கே.சி.பி. நிறுவனம் மற்றும் கொடிசியா அருகே உள்ள சந்திபிரகாஷ் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    லோக் ஆயுக்தா மசோதாவில் அரசு ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாது என்ற தனிப்பிரிவை சேர்த்தன் பின்னணி தற்போது தெளிவாகிறது என திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். #IncomeTaxRaid #MKStalin
    சென்னை:

    தமிழக அரசு பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் செய்யும் நிறுவனம் மற்றும் நெடுஞ்சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவனம் ஆகியவற்றில் சமீபத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுகளில் அரசு ஊழல் செய்திருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    நெடுஞ்சாலை திட்டங்களில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. 

    இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலங்கோல அ.தி.மு.க ஆட்சியில் சந்தி சிரிக்கும் நெடுஞ்சாலைத்துறை ஊழல்களுக்கு, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரும் அவருடைய பினாமியுமான செய்யாதுரை மற்றும் நாகராஜன் வீடுகளில் நடைபெறும் வருமான வரித்துறை ரெய்டும், அங்கு கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரொக்கப்பணமுமே சாட்சி



    தன்னுடைய உறவினர்கள், பினாமிகளுக்கு மட்டும் நெடுஞ்சாலைத் துறையின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை வழங்கி விட்டு,வலிமைமிக்க லோக் ஆயுக்தா அமைப்பில் “காண்டிராக்டுகளை விசாரிக்கக் கூடாது”என்ற தனிப்பிரிவை முதல்வர் அஞ்சி நடுங்கி ஏற்படுத்தியதன் பின்னணி தற்போது தெளிவாகிறது

    கரூர் அன்புநாதன் தொடங்கி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பினாமிகள் மீதான தற்போதைய வருமான வரித்துறை  வரை அனைத்து விசாரணைகளும் சட்டப்படி நடைபெற தீவிரப்படுத்துவதோடு, குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி அவர்கள் கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தை அரசின் கஜானாவில் உடனடியாக சேர்க்க வேண்டும்.

    என ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 
    ×