செய்திகள்

வேலூரில் டெங்கு ஆய்வு: ஷூ கம்பெனிக்கு அபராதம்

Published On 2017-11-16 12:25 GMT   |   Update On 2017-11-16 12:25 GMT
வேலூரில் டெங்கு கொசு உற்பத்தி குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் நடத்திய ஆய்வின்போது ஷூ கம்பெனிக்கு ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
வேலூர்:

வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து ஆய்வு செய்து அபராதம் விதிக்கபடுகிறது.

4-வது மண்டலத்துக்குட்பட்ட கொணவட்டம், சேண்பாக்கம், கன்சால் பேட்டை பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், பயிற்சி கலெக்டர் ஸ்ரீகாந்த் இன்று காலை ஆய்வு செய்தனர்.

வீடு வீடாக சென்று ஆய்வு செய்து அறிவுரை வழங்கினர். கொணவட்டம் பகுதியில் உள்ள கடைகள் தனியார் நிறுவனங்களில் ஆய்வு நடத்தபட்டது. அங்குள்ள ஷூ கம்பெனியில் கொசு உற்பத்தி இருந்தது கண்டுபிடிக்கபட்டது. அந்த நிறுவனத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். இதேபோல் அங்குள்ள தோல் தொழிற்சாலைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கபட்டது.

ஆய்வின் போது தாசில்தார் பாலாஜி, சுகாதார அலுவலர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News