செய்திகள்

ஓட்டல்களில் இன்று முதல் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி வசூல்: நடைமுறைக்கு வந்தது வரிக்குறைப்பு

Published On 2017-11-16 04:31 GMT   |   Update On 2017-11-16 04:31 GMT
ஓட்டல்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால், வாடிக்கையாளர்களிடம் இன்று முதல் 5 சதவீத வரியே வசூலிக்கப்படுகிறது.
சென்னை:

நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வரி வசூலிக்கப்படுகிறது. இதனால், சிறு தொழில் முனைவோர், உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக ஓட்டல்களில் திடீரென 18 சதவீத வரி விதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக 100 ரூபாய்க்கு சாப்பிடும் வாடிக்கையாளர்கள், ஜி.எஸ்.டி.யையும் சேர்த்து 118 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது.

இந்நிலையில், கவுகாத்தியில் சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 213 பொருட்களின் வரி விகிதங்களை குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதிகபட்ச வரியான 28 சதவீதம் விதிக்கப்பட்டிருந்த பொருட்களில், பெரும்பாலான பொருட்களின் வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதேபோல் அனைத்து வகையான ஓட்டல்களுக்கும் ஜிஎஸ்டி வரி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த புதிய வரி விதிப்பு மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.



அனைத்து ஓட்டல்களிலும் இன்று முதல் 5 சதவீத வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News