செய்திகள்

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

Published On 2017-11-15 14:57 GMT   |   Update On 2017-11-15 14:57 GMT
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் நடத்திய தாக்குதல் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பாக் ஜலசந்தியில் நமது பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நமது அப்பாவி மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்று மீன்பிடித்த மீனவர்களின் படகை இந்திய கடலோர காவல் படையின் ராணி அபாகா கப்பல் வழிமறித்துள்ளது. பின்னர், வீரர்கள் படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். கம்புகளாலும் இரும்பு கம்பிகளாலும் மீனவர்களை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மீனவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவமானது, மீனவர்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் உருவாக்கி உள்ளது.

எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பாதுகாப்புத் துறைக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News