செய்திகள்

காரிமங்கலம் குட்டூர் நாகல் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2017-11-14 14:42 GMT   |   Update On 2017-11-14 14:42 GMT
பருவ மழையால் காரிமங்கலத்தில் உள்ள குட்டூர் நாகல் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள குட்டூர் ஏரி தற்போது பெய்து வரும் பருவமழை மற்றும் கே.ஆர்.பி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீராலும் ஏரி நிரம்பியது.

நேற்று மதியம் மதகு பொதுபணித்துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பூஜையிட்டு நீர் திறந்துவிடப்பட்டது. சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் குட்டூர் ஏரி நிரம்பியுள்ளது. இதனால் காரிமங்கலத்தை சுற்றியுள்ள, சிக்கதிம்மன அள்ளி ஏரி, கரகப்பட்டி ஏரி, வண்ணான் ஏரி முதலான ஏரிகளுக்கு நீர்வரத்து வர தொடங்கியுள்ளது.

இதனால் சுமார் மூன்று ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். காரிமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏரிகள் அடுத்தடுத்து நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags:    

Similar News