செய்திகள்

கோவில்பட்டியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published On 2017-11-10 11:24 GMT   |   Update On 2017-11-10 11:24 GMT
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8-ந் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8-ந் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.

நகரத் தலைவர் சண்முகராஜ், வட்டார தலைவர்கள் ரமே‌ஷமூர்த்தி, தேவசகாயம், செல்லத்துரை, சேகர், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பொன்னுப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர் மாரிமுத்து, மாவட்டத் துணைத் தலைவர்கள் மதி, திருப்பதிராஜா, மாவட்ட வக்கீல் அணி செயலர் அய்யலுசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

இதில் சமையல் எரிவாயு விலை உயர்வு, பண மதிப்பு நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பங்கேற்றனர். பின்னர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பண மதிப்பு நீக்கத்தால் வங்கியின் முன்பு வரிசையில் நின்று உயிரிழந்த பொதுமக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதில் நிர்வாகிகள் உமாசங்கர், சுப்பாராஜுலு, முத்துராமலிங்கம், பங்காருசாமி, செண்பகசுப்பு, மாசாணமூர்த்தி, செல்லப்பாண்டியன், ஊர்க்காவலன், எட்வர்டுராஜ், தங்கமாரியப்பன், முத்து, சண்முகவேல், வக்கீல் மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News