செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு

Published On 2017-11-10 07:26 GMT   |   Update On 2017-11-10 07:26 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.22,560-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 6-ந்தேதி ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 232 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று ரூ.22 ஆயிரத்து 504-க்கு விற்றது. இன்று மீண்டும் பவுனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 560 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,820-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரத்து 700 ஆகவும், ஒரு கிராம் ரு.42.70 ஆகவும் உள்ளது.
Tags:    

Similar News