செய்திகள்

கொடநாடு எஸ்டேட் பண பரிவர்த்தனை தொடர்பாக வங்கியில் விசாரணை

Published On 2017-11-09 07:57 GMT   |   Update On 2017-11-09 08:11 GMT
கொடநாடு எஸ்டேட் கணக்கை பராமரித்து வரும் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி:

கொடநாடு எஸ்டேட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்த நேரத்தில் அதன் மேலாளர் நடராஜன் என்பவரிடம் தனி அறையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது எஸ்டேட்டின் கணக்கு வழக்குகள் குறித்தும், அதை கையாளுபவர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்தனர். அப்போது அவர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது சசிகலாவின் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் கணக்கு வழக்கு இருந்ததும் அவரது மறைவுக்கு பின்பு தினகரன் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.



இதையடுத்து கோத்தகிரியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு வருமான வரித்துறையினர் சென்றனர். அங்கு அவர்கள் கொடநாடு கணக்கு வழக்குகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் கொடநாடு கணக்கை கையாளுபவர்கள் யார்?, பணம் டெபாசிட் மற்றும் எடுப்பது யார்?, ஜெயலலிதா மறைவுக்கு பின்பு இதுவரை எஸ்டேட் வங்கி கணக்கில் இருந்து எவ்வளவு பணம் பரிவர்த்தனை நடந்துள்ளது? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



கொடநாடு எஸ்டேட் சோதனை, வங்கியில் விசாரணை என அடுத்தடுத்த திருப்பங்களால் கோத்தகிரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News