செய்திகள்

மலேசிய மணல் விற்பனை: 3 மாவட்ட கலெக்டர்கள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2017-11-01 07:05 GMT   |   Update On 2017-11-01 07:05 GMT
மலேசிய மணல் விற்பனை செய்வது தொடர்பாக மூன்று மாவட்ட கலெக்டர்கள் பதில் அளிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் நிறுவனம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. துறைமுகத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 53334 மெட்ரிக் டன் மணலை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் மலேசிய மணல் விற்பனை செய்வது தொடர்பாக
3 மாவட்ட ஆட்சியர்கள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் வரும் 6-ம் தேதிக்குள் விளக்கம் தர உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியர்கள் பதில் தரும்வரை துறைமுகத்தில் உள்ள மணலுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

Similar News