செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணி கேட்டு பெண்கள் போராட்டம்

Published On 2017-10-23 17:08 GMT   |   Update On 2017-10-23 17:08 GMT
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி பணி கேட்டு பெண்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி பணி கேட்டு பெண்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் இன்று நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் கோரிக்கை மற்றும் புகார் தொடர்பான மனுக்களை வழங்கினர்.

ஜோலார்பேட்டை, பேரணாம்பட்டு, சோளிங்கர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 9 பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்ற காயிதேமில்லத் அரங்கு முன்பு கலெக்டர் ராமனிடம் அங்கன்வாடி பணி வழங்க கோரி மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் அரங்கிற்குள் சென்றுவிட்டார். அப்போது 9 பெண்களும் காயிதே மில்லத் அரங்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கணவரை இழந்த விதவை பெண்கள், குடும்பத்தில் அரசு ஊழியர் இல்லாதோர் உள்ளிட்ட தகுதிவாய்ந்த பெண்களுக்கு அங்கன்வாடி பணி வழங்கப்படவில்லை.

பணம் பெற்றுக்கொண்டு தகுதி இல்லாத நபர்களுக்கு அங்கன்வாடி பணி வழங்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
Tags:    

Similar News