செய்திகள்

கருத்து சுதந்திரத்துக்கு தி.மு.க. என்றும் ஆதரவு: மு.க.ஸ்டாலின்

Published On 2017-10-22 03:01 GMT   |   Update On 2017-10-22 03:01 GMT
தி.மு.க. எப்போதும் கருத்து சுதந்திரத்துக்கும், படைப்பு சுதந்திரத்துக்கும் ஆதரவாக இருக்கும்” என்று ‘மெர்சல்’ படத்தின் பெயரை குறிப்பிடாமல் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை:

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படத்தில் மத்திய அரசுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்று உள்ளன. இதற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, சர்ச்சைக்குரிய வசன காட்சிகளை நீக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேவேளையில் ‘இந்த கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது’ என்று பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பும், நடிகர் விஜய்க்கு ஆதரவும் தெரிவிக்கும் வகையில் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில் ‘மெர்சல்’ படத்தின் பெயரை குறிப்பிடாமல் ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் பதிவு செய்துள்ள கருத்து விவரம் வருமாறு:-

“விமர்சனங்களை நசுக்க முயலும், பா.ஜ.க.வின் முயற்சி ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரானது. தி.மு.க. எப்போதும் கருத்து சுதந்திரத்துக்கும், படைப்பு சுதந்திரத்துக்கும் ஆதரவாக இருக்கும்”.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News