செய்திகள்

ராமநாதபுரம் - வாடிப்பட்டி அருகே டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் சாவு

Published On 2017-10-19 10:22 GMT   |   Update On 2017-10-19 10:23 GMT
போடிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாணவன் நித்தீஷ் டெங்கு காய்ச்சல் குணமாகாததால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தான்.
ராமநாதபுரம் :

ராமநாதபுரம் அருகே உள்ள பெரியபட்டினம் ஹமீதியா தெருவைச் சேர்ந்த மீனவர் ஜமால் முகமது (வயது58). கடந்த 14-ந்தேதி ஜமால்முகமதுவுக்கு காய்ச் சல் ஏற்பட்டது. உடனே அவரை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது.

அதைத்தொடர்ந்து மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப் பினும் சிகிச்சை பலனின்றி ஜமால்முகமது பரிதாபமாக இறந்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். ராமநாதபுரம் அரசு ஆஸ் பத்திரியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து வட்டார மருத்துவ அலுவலர் ராசிக்பீன் கூறும்போது, திருப்புல்லாணி வட்டாரத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொசு மருந்து தெளிப்பு நடவடிக்கையில் 200 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கலெக்டர் நடராஜன் உத்தரவின்பேரில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேவுகன். இவரது மகன் நித்தீஷ் (12). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு நித்தீஷ் காய்ச்சலால் அவதிப்பட்டான். உடனே அவனை வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு காய்ச்சல் குணமாகாததால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவன் நித்தீஷ் பரிதாபமாக இறந்தான்.
Tags:    

Similar News