செய்திகள்

பாளையில் செல்போன் திருட்டு வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது

Published On 2017-10-14 11:51 GMT   |   Update On 2017-10-14 11:51 GMT
பாளையில் செல்போன் திருட்டு வழக்கில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை ரகுமான் பேட்டையை சேர்ந்தவர் கோதர் மைதீன்(வயது 45). தெற்கு பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். சம்பவததன்று இவர் பைபாஸ் ரோட்டோரத்தில் செல்போன் பேசியபடி நடந்து சென்றார்.

அப்போது அவரது பின்னால் மோதுவதுபோல் வந்து நின்ற ஆட்டோவில் இருந்த ஒரு வாலிபர் திடீரென கோதர் மைதீனின் செல்போனை பறித்தார். செல்போன் பறிக்கப்பட்ட அதேநேரத்தில் ஆட்டோவும் வேகம் எடுத்தது. ஆட்டோவின் கம்பியை பிடித்தபடி, செல்போனை பறித்த வாலிபரை கோதர் மைதீன் கீழே இழுத்து போட்டார். உடனே அந்த வாலிபர் எழுந்து ஓட முயன்றார்.

இந்த நேரத்தில் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். மேலும் சில வாகன ஓட்டிகள் ஆட்டோவை விரட்டினர். ரோட்டோரத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு அதில் இருந்து மேலும் 2 நபர்கள் இறங்கி வயல்காட்டு பகுதிக்குள் இறங்கி தப்பியோடினர்.

இதுகுறித்து பாளை. குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செல்போனை பறித்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்த இர்ஷாத் (20) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் வந்த மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இர்ஷாத்தின் கூட்டாளி 17 வயது வாலிபரை இன்று காலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்து 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News