செய்திகள்

பெரியகுளம் அருகே டெங்கு ஆய்வுக்கு சென்ற கலெக்டரை முற்றுகையிட்ட மக்கள்

Published On 2017-10-13 16:52 GMT   |   Update On 2017-10-13 16:52 GMT
பெரியகுளம் அருகே டெங்கு ஆய்வுக்கு சென்ற கலெக்டரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

பெரியகுளம்:

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேவதானப்பட்டி பகுதியில் இதன் தாக்கம் அதிகம் உள்ளது. டெங்குவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் இன்று காலை பெரியகுளம் அருகே கீழ வடகரை ஊராட்சியில் டெங்கு பாதிப்பை ஆய்வு செய்ய சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் காரை மறித்து முற்றுகையிட்டனர்.

கலெக்டரிடம் கிராமத்தினர் ஆவேசமாக கூறுகையில் வடகரை ஊராட்சியில் எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றவில்லை. குப்பைகள் மலை போல் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகி உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். தொடர்ந்து கிராமத்தினர் வாக்குவாதம் செய்தனர்.

உடனே கலெக்டர் அதிகாரிகளை அழைத்து இந்த 24 மணி நேரத்தில் உடனே நடவடிக்கை எடுத்து எனக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கண்டித்தார். அதன் பின்னர் மக்கள் போராட்டத்தினை கைவிட்டனர். அதனை தொடர்ந்து கலெக்டர் வெங்கடாசலம் அந்த பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து சென்றார்.

Tags:    

Similar News