செய்திகள்

கிருஷ்ணகிரியில் காவல் துறை சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2017-10-13 15:05 GMT   |   Update On 2017-10-13 15:05 GMT
கிருஷ்ணகிரியில் காவல் துறை சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட காவல் துறை சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமை வகித்தார்.

கையெழுத்து இயக்கத்தை முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கதிரவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர். பிரியாராஜ், நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். அசோக்குமார், கிருஷ்ணகிரி டிஎஸ்பி ரவிக்குமார், நகராட்சி ஆணையர் (பொ) சிசில்தாமஸ், நகர சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய பஸ் நிலையம் அருகில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியானது லண்டன்பேட்டை, பெங்களூர் சாலை, பழையபேட்டை வழியாக சென்று 5 ரோடு ரவுண்டானா அருகில் நிறைவடைந்தது. இதில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும், காவல் துறையினர், ஊர்காவல் படையினர், நகராட்சி துப்புரவு பணியாளர்கள், சுய உதவிக்குழுவினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News