செய்திகள்

டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக மத்தியக்குழுவுக்கு தமிழக அரசு தகவல்

Published On 2017-10-13 11:20 GMT   |   Update On 2017-10-13 11:20 GMT
டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர் என தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளதாக மத்தியக்குழுவின் தலைவர் அசுதோஷ் பிஸ்வாஸ் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை சேர்ந்த மருந்தியல் துறை பேராசிரியர் அசுதோஷ் பிஸ்வாஸ் தலைமையிலான மத்திய குழுவினர் இன்று சென்னை வந்தனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் இந்த குழுவினர் ஆய்வு செய்தனர். டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அசுதோஷ் பிஸ்வாஸ், 2017 ஜனவரி முதல் இதுவரை டெங்கு பாதிப்பால் தமிழகத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளதாக கூறினார்.
Tags:    

Similar News