search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dengu fever"

    டெங்கு காய்ச்சலால் இரட்டை குழந்தைகள் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் என சுதர்சனம் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
    மாதவரம்:

    கொளத்தூர் தணிக்காசலம் நகரை சேர்ந்த இரட்டை குழந்தைகள் தீக்ஷா, தக்ஷின் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.

    அவர்களின் உடல்களுக்கு மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார். குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் சுதர்சனம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாதவரம் தொகுதிக்குட்பட்ட பொன்னியம்மன் மேடு, பிரகாசம் நகர், தணிகாசலம் நகர், மாதவரம் பால்பண்ணை, பகுதிகளில் குடியிருப்பு இடங்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது.

    குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தி ஆகி காய்ச்சல் பரவுகிறது. இது பற்றி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் மெத்தனமாக உள்ளனர். குழந்தைகள் பலியானதற்கு அதிகாரிகளே காரணம்.

    இதனால் தற்போது 2 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி விட்டனர்.

    சுகாதாரப்பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அறப்போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு, முனுசாமி மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர். #DenguFever
    ×