செய்திகள்

மதுபானங்கள் விலை உயர்வு வேதனை அளிக்கிறது: தஞ்சை குடிமகன்கள் குமுறல்

Published On 2017-10-12 16:49 GMT   |   Update On 2017-10-12 16:49 GMT
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு அமுலுக்கு வருவதால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு அமுலுக்கு வருகிறது. இதனால் குவார்ட்டர் ரூ.10 முதல் 12 வரை விலை அதிகரித்துள்ளது.

மதுபானங்களின் விலை உயர்வு குடிமகன்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதுகுறித்து தஞ்சை இ.பி.காலனியை சேர்ந்த அமல்தாஸ் என்பவர் கூறியதாவது:-

நான் வாலிப வயதில் இருந்தே மது குடித்து வருகிறேன். ஏற்கனவே மதியம் 12 மணிக்கு கடை திறப்பதால் மது குடிப்பதை ஒரளவு குறைத்து வந்தேன்.

தற்போது அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தி உள்ளது வேதனை அளிக்கிறது. அதாவது 100 சதவீதம் அதிரடியாக விலை உயர்த்தி விட்டால் நான் இனி மேல் டாஸ்மாக் கடை பக்கமே போக மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெற்கு தெருவை சேர்ந்த தனசேகர் என்பவர் கூறியதாவது:-

முன்பு மதுபான விலை குறைவாகவே இருந்தது. ரூ.50 கொண்டு சென்றால் மது குடித்து விட்டு வரலாம். தினமும் ரூ.500 வரை சம்பாதிக்கும் நான் டாஸ்மாக் கடையில் ரூ.200 வரை கொடுத்து மதுகுடித்து வருகிறேன்.

இதனால் வீட்டில் மனைவி தகராறு செய்து வருகிறார். தற்போது மதுபான விலையை அரசு இப்படி ஒரேயடியாக விலை உயர்த்தும் என்று நினைக்கவே இல்லை. இது மிகவும் கவலை அளிக்கிறது. எனவே அரசு மறுபரிசீலனை செய்து விலையை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News