செய்திகள்

அரசின் தினசரி பணிகளில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை: நாராயணசாமி

Published On 2017-10-04 12:24 GMT   |   Update On 2017-10-04 12:24 GMT
அரசின் தினசரி பணிகளில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

என்.ஆர்.காங்கிரஸ் ஆட் சியில் 2 படகுகள் வாங்கியதில் தவறு நடந்துள்ளது என, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு வராமல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசு அலுவல் விதிகளுக்கு முரணானது

ஏதாவது புகார் வந்தால், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர், செயலருக்கு அனுப்ப வேண்டும். பின் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு, கவர்னரின் பார்வைக்கு அனுப்புவது வழக்கம். தினசரி நிர்வாகத்தை நடத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு உண்டு. அரசின் தினசரி பணிகளில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.

நான் யாரையும் குறிப்பிடவில்லை. ஆனால், கவர்னர் தனக்கு அதிகாரம் உள்ளதாக அவராகவே கூறியுள்ளார். படகுகள் வாங்கப்பட்ட வி‌ஷயத்துக்கும், அவர் குறிப்பிடும் அதிகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எதற்கெடுத்தாலும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

இந்த பிரச்சினை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்படும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
Tags:    

Similar News