search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை முதல்வர்"

    புதுச்சேரியில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்தும் தர்ணா போராட்டம் 3வது நாளாக நீடிக்கும் நிலையில், மாநிலத்திற்கு இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார். #PuducheryCMDharna #KiranBedi
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கிரண்பேடி கவர்னராக பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையிலான பனிப்போர் இப்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை போலீசார் அமல்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    ஹெல்மெட் விவகாரம் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியதை அறிந்த முதல் அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நாராயணசாமி தலைமையில் 3வது நாளாக இன்றும் தர்ணா போராட்டம் நீடிக்கிறது. போராட்டம் ஒருபுறம் நடைபெற்றாலும், இதனை கண்டுகொள்ளாமல் புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட கவர்னர் கிரண்பேடி, டெல்லி சென்றார்.



    அதேசமயம், ஆளுநர் மாளிகை வளாகம் போராட்டக்களமாக மாறியிருப்பதால், அதிவிரைவு அதிரடிப்படை, துணை ராணுவம் மற்றும் தொழில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார். புதுச்சேரியில் தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால் இடைக்கால நிர்வாகியை நியமிக்கவேண்டும் என சபாநாயகர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  #PuducheryCMDharna #KiranBedi
    மக்கள் விருப்பங்களை நிறைவேற்றவிடாமல் அரசுக்கு கவர்னர் தடையாக இருக்கிறார் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். #Narayanasamy Kiranbedi
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    போலீஸ் துறையில் காலியாக உள்ள 300 இடங்களை நிரப்புவதற்கு எங்கள் அரசு முடிவு எடுத்தது. இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு போலீஸ் தேர்வு நடந்தபோது, அதிகபட்ச வயது வரம்பு 24 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    அதேபோல இப்போதும் 24 வயது உச்சவரம்பு நிர்ணயித்து தேர்வுக்கு ஏற்பாடுகளை செய்தோம். இதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளதால் அவருக்கு கோப்பு அனுப்பப்பட்டது.

    ஆனால் பாராளுமன்ற உள்துறை நிலைக்குழு போலீஸ் பணிக்கான ஆட்கள் தேர்வின் அதிகபட்ச வயது 22 என சிபாரிசு செய்திருந்ததை சுட்டிக்காட்டி 24 வயதுக்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.

    தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்களில் வயது வரம்பு 24 ஆக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியும், குரூப்-சி பிரிவு ஊழியர்களை தேர்வு செய்யும் விதிகளை உருவாக்குவதில் மாநில அரசுக்கே அதிகாரம் இருக்கிறது என்று கூறி மீண்டும் கோப்பு அனுப்பப்பட்டது. அதற்கும் ஒப்புதல் அளிக்கவில்லை.

    இதனால் போலீஸ் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார்கள். கோர்ட்டு மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிடும்படி உத்தரவிட்டுள்ளது.


    இதனால் புதுவையில் போலீஸ் தேர்வு நடத்தும் ஒட்டுமொத்த பணிகளும் முடங்கி உள்ளது.

    வயது வரம்பு 24 ஆக இருக்க வேண்டும் என்பது புதுவை மக்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது எங்களுடைய கடமை. ஆனால் அதை செய்யவிடாமல் தடுத்துவிட்டனர்.

    பாராளுமன்ற உள்துறை நிலைக்குழு வயது வரம்பு 22 என சிபாரிசு தான் செய்திருக்கிறது. அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல மாநிலங்களில் பல்வேறு வயது வரம்பு நிலைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

    ஆனால் புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு முடிவை எடுத்து அதை நிறைவேற்றுவதற்கு முயற்சித்தபோது அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பது மக்களின் பிரநிதியாக செயல்பட வேண்டும். ஆனால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு கவர்னர் தடையாக இருக்கிறார். அவருடைய செயல்பாட்டால் மக்கள் விரக்திக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #PuducherryCM #Narayanasamy Kiranbedi
    புதுச்சேரி மாநிலம் முன்னேற வேண்டும் என்றால் தன்னைப்பற்றி முதலமைச்சர் விமர்சிக்கக்கூடாது என துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கூறியுள்ளார். #PudhucherryGrowth #KirenBedi #CMNarayanasamy
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் துணை நிலை ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையிலான அதிகாரப்போட்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. அரசின் செயல்பாடுகளை ஆளுநரின் தலையீடு இருக்கக்கூடாது என முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கூறியதாவது:-



    புதுச்சேரி மாநிலத்திற்கு முன்னேற்றம் ஏற்படவேண்டும் என விரும்பினால் முதலமைச்சர் என்னைப்பற்றி விமர்சிக்கக் கூடாது. ஆளுநர் மாளிகை மற்றும் ஆளுநரின் அதிகாரங்களை குறைத்து மதிப்பீடு செய்வதன் மூலம் மாநில வளர்ச்சியின் வேகம்தான் குறையும்.

    புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PudhucherryGrowth #KirenBedi #CMNarayanasamy
    ×