செய்திகள்

புதுச்சேரி: விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய கவர்னர் தடையாக உள்ளார் - அமைச்சர் கமலக்கண்ணன்

Published On 2017-09-26 06:02 GMT   |   Update On 2017-09-26 06:02 GMT
புதுவை விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய கவர்னர் கிரண் பேடி தடையாக உள்ளார் என்று விவசாய அமைச்சர் கமலக்கண்ணன் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண் பேடிக்கும், முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கு இடையேயான மோதல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.

இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுவை விவசாய அமைச்சர் கமலக்கண்ணன், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய கவர்னர் தடையாக உள்ளார் என்று பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

புதுவை மாநில விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய ரூ.22 கோடி கடன்களை தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து அதற்கான கோப்புகளை கவர்னருக்கு அனுப்பியது. இந்த கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. விவசாய கடனை தள்ளுபடி செய்ய கவர்னர் தடையாக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News