செய்திகள்

மருத்துவ மாணவர் பிரச்சனை: உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் முன்கூட்டியே தடுத்திருக்கலாம்- கவர்னர் கிரண்பேடி

Published On 2017-09-15 10:11 GMT   |   Update On 2017-09-15 10:11 GMT
தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாகம் மூலம் சேர்க்கப்பட்ட 770 மாணவர்களை நீக்கும்படி மத்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது தொடர்பாக கவர்னர் கிரண்பேடி இணைய தளம் மூலம் கருத்து வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி:

தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாகம் மூலம் சேர்க்கப்பட்ட 770 மாணவர்களை நீக்கும்படி மத்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது தொடர்பாக கவர்னர் கிரண்பேடி இணைய தளம் மூலம் கருத்து வெளியிட்டுள்ளார்.

மத்திய மருத்துவ கவுன்சில் 770 மாணவர்களை நீக்கும்படி உத்தரவிட்டு இருப்பதன் மூலம் ஒரு சோகமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

இது சம்பந்தமாக முன்கூட்டியே உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இவற்றை எல்லாம் தடுத்து இருக்கலாம்.

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி கவர்னர் மாளிகையில் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதன் பிறகு சேர்க்கை குழு தலைவர் சித்ரா வெங்கட்ராமன் குறைகளை சுட்டி காட்டிய போதும் சரியான மேல் நடவடிக்கை இல்லை.


சம்பந்தப்பட்ட கல்லூரிகள் தன்னிச்சையாக உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொண்டதால் இப்போது மாணவர்கள் சேர்க்கையை மத்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்யும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

இது சம்பந்தமாக நான் தலைமை செயலாளரிடம் அறிக்கை கேட்டு இருக்கிறேன். இதுவரை வரவில்லை. உரிய கால கட்டத்தில் அதன் அவசியம் கருதி ஒருங்கிணைந்து தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது.

அப்படி செயல்பாடுகள் இல்லாததால் இன்று நமது மாணவர்களும், பெற்றோர்களும் பாதிக்ககூடிய துரதிருஷ்ட நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இவ்வாறு கவர்னர் கிரண் பேடி கூறினார்.
Tags:    

Similar News