செய்திகள்

வெற்றிவேலை கட்சியை விட்டு நீக்குவோம்: மதுசூதனன் ஆவேசம்

Published On 2017-09-12 04:25 GMT   |   Update On 2017-09-12 04:25 GMT
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு போட்டதற்காக வெற்றிவேல் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என மதுசூதனன் கூறியுள்ளார்.
சென்னை:

தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் எம்.எல்.ஏ. பற்றி அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் அளித்த பேட்டி வருமாறு:-

அ.தி.மு.க. பொதுக்குழுவை எதிர்த்து வெற்றிவேல் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு போட்டிருக்கிறார். அவர் காங்கிரசில் இருந்து அ.தி.மு.க.வுக்கு கட்சி மாறி வந்தவர். காங்கிரசில் இருந்து வந்ததால் அந்த கட்சியின் கலாசாரத்தை (கோஷ்டி பூசல்) அ.தி.மு.க.விலும் உருவாக்கி வருகிறார்.

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வை எந்த தனி மனிதனாலும் அழிக்க முடியாது. இது அம்மாவால் பலமான கோட்டையாக திகழ்கிறது. விரைவில் வெற்றிவேலின் கிரிமினல் ஊழல்களை அம்பலப்படுத்துவேன். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.


அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு போட்டதற்காக வெற்றிவேல் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்.

நான் எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க.வுக்காக 40 முறையும் அம்மா பொதுச்செயலாளராக இருந்த போது 9 முறையும் ஜெயிலுக்கு சென்று இருக்கிறேன். அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனாகத்தான் என்னை நான் பாவித்து வந்து இருக்கிறேன்.

ஆனால் சசிகலாவும் அவரைச் சார்ந்தவர்களும் ஊழல் வழியில் சென்று கட்சியை மிகத்தாழ்வான நிலைக்கு கொண்டு சென்று விட்டார்கள். நாங்கள் அதை சுத்தப்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News