செய்திகள்

சட்டம் ஒழுங்கு பிரச்சினை: எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

Published On 2017-09-11 07:36 GMT   |   Update On 2017-09-11 07:36 GMT
அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கோர்ட்டு தடையை மீறி இன்று போராட்டம் நடத்தி வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க சென்னை போலீஸ் கமிஷனருடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னை:

தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கோர்ட்டு தடையை மீறி இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதேபோல் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மாணவர்களும், போராடி வருகிறார்கள்.

அரசு ஊழியர்கள் நாளை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் குதிக்க உள்ளனர்.

இதனால் வேலைக்கு செல்லும் ஊழியர்களுக்கும், போராட்டம் நடத்துபவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகும் என தெரிகிறது.

இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அரசு தகுந்த முன்னேற்பாடுகளை எடுத்து வருகிறது.


இதையொட்டி போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விசுவநாதன் ஆகியோரை தலைமை செயலகத்துக்கு அழைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது உள்துறை செயலாளரும் உடன் இருந்தார்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் பல்வேறு உத்தரவுகளை போலீஸ் அதிகாரிகளுக்கு பிறப்பித்தார்.

Tags:    

Similar News